அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதலமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்: ஆர்.கே.செல்வமணி

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 09:31 pm
chief-minister-for-amma-shooting-site-will-be-foundation-is-laid-tomorrow-rk-selvamani


காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கட்டப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செல்லமணி அளித்த பேட்டியில் மேலும், ‘அம்மா படப்பிடிப்பு தளம் கட்டுவதற்கு தமிழக அரசு அறிவித்த ரூ.5 கோடியில் முன்பணமாக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு தளத்தை திறக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

மேலும், சினிமா டிக்கெட் விற்பனைக்கு இந்தியளவில் பொதுத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close