விருது பெறும் நடிகர் ரஜினிக்கு வைகோ வாழ்த்து!

  அனிதா   | Last Modified : 03 Nov, 2019 12:34 pm
vaiko-congratulates-to-rajini

சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கோவாவில் 50வது சர்வதேச திரைப்படவிழா வரும் நவ 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமாவில் முக்கிய பங்காற்றியமைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான 'Icon of Golden Jubilee' விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் சிறப்பு விருது பெறும் ரஜினிகாந்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கலையுலகம் கொண்டாடும் பொன்விழா நாயகன் ரஜினிக்கு சிறப்பு விருது பெற முழு தகுதியும் உண்டு என்றும், ரஜினிகாந்த் இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துவதாகவும் வைகோ கூறியுள்ளார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close