ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 09:25 pm
rajinikanth-s-music-composer-d-imman-official-announcement

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கவுள்ள திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள  ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே, ரஜினிகாந்தின் 168ஆவது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு பிறகு இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் 168ஆவது திரைப்படத்திற்கு இசையமைக்க டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close