தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 02:27 pm
warrant-to-producer-gnanavel-raja

வருமானவரி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஞானவேல் ராஜா, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கொள்ள ஞானவேல் ராஜாவை ஆஜராகும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பல முறை ஞானவேல் ராஜாவை ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிருந்தும் அவர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close