சென்னையில் இன்று நடைபெற்ற ‘தம்பி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் இளவரசு பேசும்போது, ஓரிடத்தில் கார்த்தி, ஜோதிகா தம்பதியர் என தவறுதலாக குறிப்பிட்டு பேசியது, அங்கிருந்த ஜோதிகாவை முகம்சுழிக்க வைத்தது.
தமிழில் பாபநாசம் திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் மற்றும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தம்பி’.
இந்த நிலையில், சென்னையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில், நடிகர் கார்த்தி, சூர்யா, ஜோதிகா, சத்யராஜ், இளவரசு மற்றும் அத்திரைப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் இளவரசு, விழாவில் நடிகர் இளவரசு பேசும்போது, ஓரிடத்தில் கார்த்தி, ஜோதிகா தம்பதியர் என தவறுதலாக குறிப்பிட்டார். இவரின் இந்த பேச்சு மேடையில் அமர்ந்திருந்த ஜோதிகாவை முகம் சுழிக்க வைத்தது. விழாவில் கலந்து கொண்டவர்களும் சில நிமிடம் திகைப்புடன் இருந்தனர்.
newstm.in