என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு

  முத்து   | Last Modified : 10 Dec, 2019 12:36 pm
trailer-of-enter-the-girl-dragon-to-release

தெலுங்கு திரைப்பட பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு மிகவும் பிடித்தமானவர். ராம்கோபால் வர்மா தற்போது 'என்டர் த கேர்ள் டிராகன்' என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் பூஜா பலேகர் நாயகியாக அறிமுகமாகிறார்.  இதன் டீசர், ப்ரூஸ் லீயின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த டீசருக்கு அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வரும் 13ஆம் தேதி வெளியிட உள்ளதாக ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். புரூஸ் லீயின் சொந்த ஊரான சீனாவின் ஃபோஷன் நகரில் ட்ரெயிலர் வெளியிட உள்ளதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வெளியான டீசரில் நாயகியின் கிளாமர் அவரது சண்டைக் காட்சிகளை விட கூடுதலாக இருந்தது.

இதனால் இப்போது ட்ரெயிலரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close