சுயமா சிந்திக்கறவன் தான் ‘சூப்பர் ஹீரோ’ ட்ரைலர் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் அதிரடி! 

  அனிதா   | Last Modified : 13 Dec, 2019 07:40 pm
sivakarthikeyan-s-hero-film-audio-and-trailor-launch

‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அர்ஜூன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  இவர்களுடன் ரோபோ சங்கர், இவானா என பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். 

இம்மாதம் 20 ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.  இதில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், பி.எஸ். மித்ரன், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

ஹீரோ படத்தின் ட்ரைலரில் நடிகர் சிவகார்த்திகேயன், எல்லோரும் பள்ளியில் படிக்கும் போது டாக்டர், கலெக்டர், வக்கீல் என பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கும் போது, அப்போதே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். 

எல்லாரும் சூப்பர் ஹீரோன்னு ஒன்னு இல்லன்னு சொல்றாங்க, ஆனா சுயமா சிந்திக்க தெரிஞ்சவன் தான் ‘சூப்பர் ஹீரோ’ என பஞ்ச் வசனமும் வைத்திருக்கிறார்கள். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close