ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ! உற்சாகத்தில் ரஹ்மான்!

  அனிதா   | Last Modified : 14 Dec, 2019 06:02 am
ar-rahman-s-daughters-ahimsa

திருக்குறளில் காந்தியின் அகிம்சை கொள்கையை பாடி அசத்திய இசைப்புயலின் மகள்கள் 

காந்தியின் அஹிம்சைக் கொள்கைகளை திருக்குறள் மூலம் உலகிற்கு பரப்புவதற்காக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும், யு2 நிறுவனமும் இணைந்து அஹிம்சா என்ற பாடலைத் தயாரித்தனர்.

ஏ.ஆர் ரஹ்மானின் மகள்களான காதிஜா மற்றும் ரஹிமா குரலில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. திருக்குறளை வைத்து எழுதப்பட்ட இந்தப் பாடல் ஆங்கிலத்திலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

அஹிம்சா பாடல் குறித்த முன்னோட்ட வீடியோவை நேற்று தனது யூ ட்யூப் பக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டிருந்த நிலையில் அஹிம்சா படத்தின் ரீமேக் வெர்சன் யூ-2 யூ ட்யூப் பக்கத்திலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தச் செய்தியை ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close