வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் லவ்வர் புகைப்படம்

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:56 am
world-famous-lover-worldwide-release-on-feb-14th

ஐஸ்வர்யா ராஜேஷ் 'அவர்களும் இவர்களும்" என்ற படம் மூலம் தமிழ் திரைப்படத்துறை அறிமுகமானார். தொடர்ந்து அட்டக்கத்தி, சட்டப்படி குற்றம், ரம்மி, திருடன் போலீஸ், கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கு பட முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகிறார். 

'டியர் காம்ரேட்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா கைவசம் ஆனந்த் அண்ணாமலையின் 'ஹீரோ', பூரி ஜெகன்நாத்தின் 'ஃபைட்டர்' மற்றும் க்ராந்தி மாதவ்வின் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' என மூன்று தெலுங்கு படங்கள் உள்ளது. இதில் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டாவின் 9-வது படமாகும். 

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் திரசா, இஸபெல் லெயிட் என நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.  கோபி சுந்தர் இசையில், ஜெயகிருஷ்ணா கும்மாடி ஒளிப்பதிவு செய்கிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை 'கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் மீடியா & எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட்' என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஏற்கனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்போது, விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் பெற்றுள்ள புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close