சமரசமான ராதாரவி! மீண்டும் களமிறங்கிய சின்மயி!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 04:59 pm
chinmayi-dub-in-a-tamil-film

மீடூ மூலம் பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியைப் பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதுமாக இருந்து வந்தது. இதையடுத்து சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் சின்மயி.

இந்நிலையில் சின்மயி சிவகார்த்தி நடிக்கும் ஹீரோ படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'ஒரு எழுச்சி போருக்குப் பிறகு, ஒரு வருடம் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு - நான் ஒரு தமிழ் திரைப்படத்தில் டப் செய்கிறேன். பி எஸ் மித்ரன் டப்பிங் யூனியன் மற்றும் ராதா ரவி ஆகியோருடன் எவ்வாறு பணியாற்றினர் என்பது எனக்குத் தெரியும், மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் என் ஹீரோக்கள்' என்றும் இரும்புத்திரை படத்தில், நவீனத்தின் அழிவுகளை இவ்வளவு அழகாக இவரைத்தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது என்றும் புகழ்ந்துள்ளார்.

 

— Chinmayi Sripaada (@Chinmayi) December 13, 2019

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close