பிரபல ‘ஷோலே’ பட நடிகை மும்பையில் மரணம்! அதிர்ச்சியில் பாலிவுட்! 

  அனிதா   | Last Modified : 15 Dec, 2019 09:43 pm
sholay-actress-dies-in-mumbai

1970 களில் மும்பை திரையுலகைப் புரட்டிப் போட்ட படம் ‘கார்ம் ஹவா’. ‘பரிட்சாய்’ படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை கீதா, முதல் படத்திலேயே இந்தி சினிமா ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார். அதன் பின்னர், எண்பதுகளில் பாலிவுட்  முழுக்கவே பிரபலமான நடிகையாக வலம் வந்த கீதா, ‘ஷோலே’, ‘திரிஷுல்’, ‘டிஸ்கோ டான்சர்’ போன்ற ரசிகர்களின் ம் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் படங்களில் நடித்திருக்கிறார். 

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தப் போதே பிரபல ஆவணப்படங்களின் தயாரிப்பாளரான சித்தார்த் காக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், தனது கணவரின் தயாரிப்பில் உருவாகும் ஆவணப்படங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் கலை இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

70, 80 களில் இந்தி திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை கீதா, உடல் நலக் குறைவால் நேற்று மாலை மும்பையில் காலமானார். அவருக்கு அந்தாரா என்கிற மகள் இருக்கிறார். நடிகை கீதாவின் மகள் அந்தாராவும் ஆவணப்படங்களின் இயக்குநராக உள்ளார். மும்பை திரையுலகினர் மத்தியில், வெறும் நடிகையாக மட்டுமல்லாமல், தனது சமூக சேவைகளுக்காகவும் பெரிதும் போற்றப்பட்டவர் நடிகை கீதா என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close