பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப்-2 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:59 am
kgf-2-first-look-and-release-announcement

கன்னட சினிமாவில் பல வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யஷ். கடந்தாண்டு வெளியான கேஜிஎப் படம் மூலம் இவர் நாடு முழுக்க பிரபலமானார்.

கேஜிஎஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்தது. ரூ.250கோடிக்கும் அதிமாக வசூல் ஆனதாக கூறப்படுகிறது. குறிப்பாக கன்னட சினிமா உலகில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப்-2 உருவவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ஆம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதேபோல், அடுத்த கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close