ஜனிமூன் சென்ற காதல் ஜோடி! அடுத்தடுத்து 3 கொலைகளால் பீதி!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:33 am
3-murders-around-couple-enjoying-honey-moon-trip

தமிழ் திரையுலகில் வெளியாக இருக்கும் படங்களின் இயக்குநர்கள் அனைவருமே படத்தைப் பற்றி பேட்டி கொடுக்கும் போது, இது வரைக்கும் யாருமே சொல்லாத கதையை படமா எடுத்திருக்கிறோம் என்ற வரியைச் சொல்லி தான் பேட்டி கொடுப்பார்கள்.

அப்படி, இதுவரைக்கும் யாருமே சொல்லாத கதையாக எடுத்திருக்கிறார் இயக்குநர் திவாகர். படம் பேரு லேகா. அப்படியென்ன கதை என்கிறீர்களா?

35 வயசு வரைக்கும் திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணோட திருமணம் நடக்கிறது. புது மனைவியை அழைச்சுக்கிட்டு ஜாலியா தேனிலவு கொண்டாட போனான். தேனிலவுக்கு போன புது ஜோடியை, அடுத்தடுத்து நடக்கும் மர்மமான கொலைகளைக் கண்டு பிடிக்க வந்த போலீஸ் துரத்துது.

இந்த ஜோடிக்கும் அந்த கொலைக்கும் என்ன காரணம்னு பரபரப்பா சொல்லியிருக்காங்களாம். இதுவரைக்கும் யாருமே சொல்லாத கதை தானே? இருங்க...இருங்க... அடிக்க வராதீங்க...!

படம் ரிலீஸ் சமயத்துல எப்படியும் ட்ரைலர் வெளியிடுவாங்க... அப்போ படத்தை பற்றி நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! அதுவரைக்கும் அவங்க சொல்றதைப் பொறுமை கேட்டுப்போம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close