அனிதா,புஷ்பவனம் குப்புசாமி  தம்பதியரின் மகளைக் காணவில்லை! 

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:37 am
anitha-kuppusamy-police-complaint

பிரபல தமிழிசைக் கலைஞரான அனிதா குப்புசாமி, புஷ்பவனம் குப்புசாமி தம்பதியர்கள் தொடர்ந்து தமிழக மேடைகளில் மக்களிசையை முதன்மையாகப் பாடி வருபவர்கள். இதில், புஷ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றிருப்பவர். சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

இவரது மனைவி அனிதா குப்புசாமியும் பிரபல பாடகியாவார்.  இவர்கள் இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்கள் நடத்தும் விழாக்களில் இசைக் குழுவினரோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள். இவர்களுக்கு பல்லவி, மேகா என இரண்டு இரு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் பல்லவி மருத்துவராக பணிபுரிகிறார். இரண்டாவது மகள் மேகா. அனிதா குப்புசாமி  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அதிமுகவில் அதிகளவில் ஈடுபாடு காட்டாமல் கட்சியில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், தனது மகளைக் காணவில்லை என்று இன்று புஷ்பவனம் குப்புசாமி சென்னை அபிராமபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிஜ நிலவரமும், மகள் காணாமல் போனதற்கான காரணமும் வெளியாகவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர், மகன் புஷ்பவனம், மருமகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன்னை கவனிக்காமல் இருப்பதாகவும், மருமகள் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் புஷ்பவனம் குப்புசாமியின் தாயார் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close