அனிதா குப்புசாமியின் மகளைக் காணவில்லை! திரையுலகினர் அதிர்ச்சி!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:38 am
anitha-kuppusamy-police-complaint

பிரபல நாட்டுப்புற பாடகரும் திரைப்பட பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பல்லவி, மேகா என்று இரு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் பல்லவி தற்போது மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி திடீரென காணாமல் போய் விட்டதாகவும், பல்லவிக்கும், அவரது சகோதரிக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது.

அதனால் கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளார்.  இதையடுத்து காணாமல் போன புஷ்பவனம், அனிதா தம்பதியரின் மகள் பல்லவியை போலீசார் தேடி வருகின்றனர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close