ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பொங்கல் ‘பட்டாசு’!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:39 am
danush-s-pattasu-to-release-this-pongal

பாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு  ஜனவரி  மாதம் , அஜித் குமார் நடிப்பில் வந்த "விசுவாசம்" படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இதை நிரூபித்த சத்யஜோதி நிறுவனத்தினர் 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "பட்டாசு" திரைப்படத்தை திரையிட உள்ளனர். 

அசுரன் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், துரை செந்தில் குமார் இயக்கத்தில் ‘பட்டாசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.  

கடந்த  வருடம் பொங்கலுக்கு அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட்டோம். இந்த வருடம் தனுஷ் நடிப்பில் ‘பட்டாசு’ படமும் பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம் என்று கூறும் தயாரிப்பாளர்கள், ‘பட்டாசு’ படம் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக உருவாகி இருப்பதாகவும், கூறியிருக்கிறார்.
‘பட்டாசு’ படத்தில் தனுஷுடன், நவீன் சந்திரா, சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close