என்னை யாரும் கடத்தவில்லை! அனிதா குப்புசாமியின் மகள் பேஸ்புக்கில் பதிவு!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:39 am
i-m-safe-says-pallavi-agarwal

பிரபல நாட்டுப்புற பாடகரும் திரைப்பட பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பல்லவி, மேகா என்று இரு மகள்கள் இருக்கின்றனர். இதில் இவர்களது மூத்த மகள் பல்லவி தற்போது மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில்,  புஷ்பவனம், அனிதா தம்பதியரின் மூத்த மகள் பல்லவி, நேற்று இரவு தங்கையுடன் ஏற்பட்ட சண்டையில் கோபமாக வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றதாகவும், இதுவரையில் வீடு திரும்பவில்லை என்றும் இன்று மாலை சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாய் பரவி வந்தது. இது குறித்து அனிதா, புஷ்பவனம் குப்புசாமியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தன்னை யாரும் கடத்திச் செல்லவில்லை என்றும் தான் பத்திரமாக இருப்பதாகவும், தான் காணவில்லை என்கிற செய்தி வெறும் வதந்தி தான். அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று பல்லவி, அவரது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close