கல்யாண பிரார்த்தனை! கோயில் கோயிலாக சுற்றி வரும் நடிகை நயன்தாரா!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:41 am
nayanthara-s-marriage-wish

பாலாஜி இயக்கி, நடிக்கும் படம், 'மூக்குத்தி அம்மன்'. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஐசரி கணேஷ் இதனை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக நயன்தாரா, தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று பரிகார பூஜைகளைச் செய்தார். அதன் பின்னர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கும் இருவரும் இணைந்து சென்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நாகர்கோவிலில் இருக்கும் சுசீந்திரம் கோயிலுக்கு நடிகை நயன்தாரா தனது காதலருடன் சென்று  சுவாமி தரிசனம் செய்தார். 

அடுத்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், ஏற்கெனவே நயன்தாராவின் இரு காதல்களும் திருமணத்தில் முடியாமல் தோல்வியில் முடிவுற்றதால், திருமணத்திற்கு முன்பாக பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு இருவரும் ஜோடியாக சென்று  பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close