போதையில் போலீசாரை தாக்கிய நடிகையின் சகோதரர் கைது..!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 12:01 pm
actress-babilona-brother-arrest

சென்னையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதாக பிரபல நடிகையின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. தை பொறந்தாச்சு, உன்னைக் கொடு என்னைத் தருவேன் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக தோன்றினார். இவரது சகோதரர் விக்னேஷ் குமார் சென்னை சாலிகிராமம் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு விருகம்பாக்கம் போலீஸ் உதவி ஆய்வாளர் பழனி, காவலர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சாலிகிராமம் அருகே போலீசார் வந்த போது அங்கு ரோட்டில் நின்றபடி நடிகை பாபிலோனாவின் தம்பி விக்கி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டபடி இருந்தார். அங்கு சென்ற போலீசார் விக்கியிடம் விசாரணை நடத்தினர். அவர் குடிபோதையில் இருந்ததால் காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி ரோந்து வாகன டிரைவர் சங்கரை கன்னத்தில் அறைந்துள்ளார்.இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து வந்து போலீசாரை தாக்கியதாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close