நயன்தாரா மனமுருகி பிரார்த்தனை! வைரலாகும் வீடியோ!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 12:00 pm
nayanthara-praying-at-mandakkadu-temple

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். 

இவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசிந்திரம் தாணுமாலையன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோவில் மற்றும் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இந்த புகைப்படம் வைரலாகி வந்தது. 

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் சுசிந்திரம் தாணுமாலையன் கோயிலுக்கு சென்றுள்ளது. அங்கு ஸ்ரீபலி பூஜைக்காக கோவில் மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அரை மணி நேரம் பக்தா்களோடு பக்தராக கோவில் தரையில் உட்காந்திருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நடை திறக்கப்பட்டதும் சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close