குஷ்பு, த்ரிஷா, நயன்தாராவை எல்லாம் மிஞ்சிய காஜல் அகர்வால்!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 11:58 am
the-wax-statue-to-kajal-aggarwal

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால். பழனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய், அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.  கடைசியாக, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'கோமாளி' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து  பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் காஜல் நடித்துள்ளார். நடிகை கங்கானா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த குயின் படத்தின்  ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இது தவிர தெலுங்கு மற்றம் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ஒரு படம் இவர் கைவசம் உள்ளது. மேலும், தமிழில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.

 

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது. இது குறித்த சில புகைப்படங்களை காஜல் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த சிலை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 

 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close