‘ரஜினி 168’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியது!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 11:57 am
rajini-168-film-shoot-starts-today

‘தர்பார்’ படத்திற்கு பிறகு ரஜினி, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக நேற்று ஹைதராபாத் சென்றிருந்தார். 

சிவா இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, சூரி, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரஜினி 168  படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். 

படத்தின் பூஜை சென்னையில் டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியது.

மும்பையில் நேற்று   நடைபெற்ற தர்பார் படத்தின் டிரைலர் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார். டிரைலர் விழா முடிந்தவுடன், கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் நேற்றிரவே மும்பையிலிருந்து இன்று படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் ரஜினி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close