பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்! இந்து, கிறிஸ்தவ முறைகளில் காதல் திருமணம்!

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 04:02 pm
osthi-movie-actress-richa-gangopadhyay-marriage

தென்னிந்தியத் திரையுலகில் 'லீடர்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா. அதனைத் தொடர்ந்து 'மயக்கம் என்ன', தனுஷுக்கு நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக 'ஒஸ்தி' படத்தில் நடித்தார். இதன் பிறகு படங்களில் நடிப்பதை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு படிக்க சென்ற ரிச்சா, அங்கு அவருடன் படித்த ஜோ என்பவரை காதலித்து வந்தார். 

கடந்த ஜனவரி 15-ம் தேதி தன்னுடன் பிஸினஸ் ஸ்கூலில் படித்த ஜோவைக் காதலித்து வருவதாகவும், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், ரிச்சா - ஜோ இருவரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில், இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

ரிச்சா - ஜோ தம்பதியினருக்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். இருவருமே அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் மாகாணத்தில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close