அஞ்சலியுடன் திருமணமா? ஜெய் சொன்ன அதிர்ச்சி தகவல்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 09:29 am
actor-jai-announced-his-marriage

எங்கேயும் எப்போதும் படம் வெளியானதிலிருந்து ஜெய்யும், அஞ்சலியும் அடிக்கடி சந்தித்து கொண்டதாக செய்திகள் பரவி வருகின்றன. திரைப்படங்களில் ஜோடியாக நடிப்பவர்களை தங்களது வாழ்க்கைத் துணையாகவும் தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல.

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா என நீளும் இந்தப் பட்டியலில் ஜெய் -அஞ்சலியும் இணைவார்களா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கிசுகிசுவுக்கெல்லாம் நடிகர் ஜெய் முற்றுப் புள்ளி வைத்துள்ளார். நடிகை அஞ்சலியும் நானும் நீண்ட கால நண்பர்கள்.

நண்பர்கள் என்ற முறையிலேயே எங்களுடைய சந்திப்பு எல்லாம் நடந்தது. அஞ்சலியும் நானும் திருமணம் செய்துக் கொள்வதாக வெளியான தகவல்கள் அனைத்து வதந்திகளே. பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் திருமணம் நடக்கும். அப்போது பத்திரிக்கையாளர்களை வரவழைத்து நிச்சயமாக அறிவிப்பேன் என திருமணம் குறித்து திடீர் டிவிஸ்டையும் கொடுத்துள்ளார் நடிகர் ஜெய்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close