எப்படி வேணா ட்ரஸ் போடுவேன்! கவர்ச்சியில் களமிறங்கிய ஹீரோயின்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 09:30 am
meera-nanthan-photos-and-comments

வால்மீகி, அய்யனார், சண்டாமிருதம், சூரிய நகரம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் மீரா நந்தன். தமிழில் படவாய்ப்புகள் குறைந்ததால் மலையாளப் படங்களை நோக்கி தனது பார்வையை நகர்த்தினார்.

எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகளும், கதை அம்சங்களும் மீரா நந்தனுக்கு அமையவில்லை. அதனால் துபாயில் ஒளிபரப்பாகும் பிரபல ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஷார்ட் ட்ரெசில் எடுத்த போட்டோவை இன்ஸ்கிராமில் பதிவிட்டிருக்கிறார். குடும்பப் பாங்கான வேடங்களில் மீரா நந்தனைப் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு, இந்த புகைப்படம் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் மீராநந்தனின் இன்ஸ்கிராம் பதிவிற்கு, உங்களை குடும்பப் பாங்கான உடைகளில் தான் பார்க்க விரும்புகிறோம் என்று தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் வேறு சிலரோ இந்தப் புகைப்படத்தை அவர்களது குடும்பத்திற்கு அனுப்பி, இதைக் கண்டிக்க மாட்டீர்களா எனப் பதிவிட்டிருந்தனர். இதனால் மீரா நந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மத்தியில் சிறிய  அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இதனால் கோபமடைந்த மீரா நந்தன் என்ன உடை அணிய வேண்டும் என்பது என்னோட உரிமை அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. குட்டையாக உடையணிந்து இருப்பதைப் பற்றி யாரும் குறை கூற முடியாது. மேலும் இதுபோன்று அநாகரிகமாக பேசுவோர்களைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை என மீராநந்தன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close