ரஜினியின் கட்சி புது வருஷத்துல உதயம்! சத்திய நாராயணராவ் தகவல்!

  சாரா   | Last Modified : 21 Dec, 2019 09:31 am
rajini-s-new-party-starts-in-2020

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டிசம்பர் 12ம் தேதி பிறந்த மூன்று குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். 

அதன் பின்னர் நிருபர்களிடையே பேசும் போது, ரஜினிகாந்த் பிறந்த நாளில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அடுத்த ஆண்டு அறிவிப்பு வெளியிடுவார். கூட்டணியா? தனித்தா? என்பதை அவரே தெரிவிப்பார். முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close