குடியுரிமைத் திருத்த சட்டம் : ரஜினிகாந்த் சர்ச்சை கருத்து

  சாரா   | Last Modified : 20 Dec, 2019 04:40 pm
violence-is-not-a-solution-to-any-problem-rajinikanth

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது குறிப்பாக மாணவர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னெடுத்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறையும் கலவரமும் ஒரு வழியாக இருந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

தேசபாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் வன்முறைகள் மனதிற்கு வேதனை அளிப்பதாகவும் நடிகர் ரஜினி காந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பதிவில் எந்த ஒரு இடத்திலும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வார்த்தைகளை நடிகர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close