தெலுங்கு ஹீரோவை காதலிக்கும் நடிகை கல்யாணி? தடை சொல்லாத குடும்பம்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 09:39 am
love-rumor-s-pranav-with-kalyani

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ், இவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் பாபாநாசம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். இவர், தமிழ், மலையாள பட உலகில் முன்னணி இயக்குனராக உள்ள பிரியதர்ஷன் மகள் கல்யாணியை காதலித்து வருவதாக மலையாள திரைப்பட வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்யாணி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் படத்திற்க வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கல்யாணியும் பிரணவும் புதிய மலையாள படமொன்றில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். மோகன்லாலின் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வருவதாகவும், இப்போது அந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த காதல் வதந்தியா? உண்மையா? என்று இருவரும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அவர்கள் காதலிக்கவில்லை என உறவினர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மலையாள பட உலகினர் காதல் இருப்பது உறுதி என கூறி வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close