வைரலாகும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் ரொமாண்டிக் பாடல்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 03:00 pm
saravana-s-romantic-scenes

லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணா நடிக்கும் படத்தில் சரவணா, கீர்த்திகா திவாரி நடிக்கும் ரொமேண்டிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் கசிந்த சரவணா - கீர்த்திகா திவாரியின் ரொமேண்டிக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

லெஜெண்ட் சரவணா  ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணா தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரப் படத்திற்காக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பித்தில் பலதரப்பட்ட மக்களின் கேலிகளுக்கும் கிண்டலுக்கும் ஆளானார். 
இந்தக் கேலிக் கிண்டல்களே முற்றுப் பெறாத நிலையில் தன்னை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்க இருப்பதாக மக்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. 

பூஜைக்கு பிறகு படப்பிடிப்பும் தொடங்கி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தில் சரவணாவுக்கு ஜோடியாக புதுமுக நாயகி கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் ரொமேண்டிக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

சரவணா கீர்த்திகா திவாரியுடன் செய்யும் ரொமேண்டிக்  காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. படுக்கையில் அமர்ந்து சரவணா கீர்த்திகா திவாரியை நோக்கி தன்னுடைய காதல் அம்புகளைப் பார்வையாலே தொடுத்திருக்கும் காட்சி தான் இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close