ஆண் நண்பருடன் ஊர் சுற்றும் காஜல் அகர்வால்! புது வருஷத்தில் கல்யாணம்!

  அனிதா   | Last Modified : 21 Dec, 2019 02:04 pm
he-is-kajal-agarwal-s-crush

தமிழின் முன்ணனி நடிகையாக கடந்த சில வருடங்களாக வலம் வந்த காஜல் அகர்வால் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். இறுதியாக ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இந்தியன் 2 படத்திற்கு கமிட் ஆகி இருக்கிறார்.

நண்பர்களுடன் பிஸியாக இருப்பதால் திரைப்படங்களைத் தேர்வு செய்து தான் நடித்து வருகிறார். கிரிக்கெட், சுற்றுலா இப்படி தன்னுடைய வாழ்வை இனிமையாக அனுபவித்து வருகிறார் காஜல் அகர்வால். சமீபத்தில் தன்னுடைய ஆண் நண்பருடன் கிரிக்கெட் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் அவர்கள் இருவரும் நெருங்கி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதுமட்டுமில்லாமல் கூட வந்த ஆண் நண்பரின் தோளில் ஏறி உட்கார்ந்தப் படி இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வளவு நெருக்கமாக புகைப்படங்களை யாருடனும் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்டதில்லை. இந்த ஆண் நண்பருடன் தான் தற்போது தொடர்ந்து காஜல் அகர்வால் ஊர் சுற்றி வருவதாக அக்கட பூமியில் தகவல்கள் வெளியாகின்றன. வரும் புது வருஷத்தில் காஜல் அகர்வால் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின்றன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close