ஆன்லைனில் சரக்கு! 35 ஆயிரம் ரூபாய் ஏமாந்த பிரபல நடிகை!

  அனிதா   | Last Modified : 22 Dec, 2019 03:41 pm
heroin-lost-of-money-by-buying-alcohol-online

ஆன்லைனில் மதுபாட்டில் ஆர்டர் செய்த ஹீரோயினிடம் நாடகமாடி 35,000 ரூபாயை லாவகமாக சுருட்டிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 

தமிழ் திரைப்படத்தில் சித்திரம் பேசுதடி-2 படத்தின் துணை கதாநாயகியாக நடித்தவர் பிரியா பானர்ஜி. மேலும் இவர் கிஸ், அசுரா, ஜஸ்பா உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும், 3 தேவ், பாரிஸ் உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

கனடாவில் பிறந்த பிரியா பானர்ஜி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் மதுபானங்களை  ஆர்டர் செய்துள்ளார். மதுபானத்தை வீட்டிற்கு எடுத்து வருவதற்காக அவரது போன் நம்பரை கொடுத்திருந்தார். இந்நிலையில் மதுபானத்திற்கு முதலில் பணத்தை செலுத்தியப் பிறகு மதுபானத்தை எடுத்து வருவதாக மர்ம நபர் பிரியா பானர்ஜியை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

மதுவின் மீதான மயக்கத்தில் இருந்த பிரியா பானர்ஜி தனது டெபிட் கார்டு விவரங்களை முழுவதுமாக அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். ஓடிபி எண்ணையும் கொடுத்துள்ளார். 23 ஆயிரம் பணத்தை லாவகமாக சுருட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த நடிகை பிரியா பானர்ஜி அந்த மர்ம நபருக்கு போன் செய்திருக்கிறார். தவறு நடந்து விட்டதாக வருத்தம் தெரிவித்த அந்த மர்மநபர் கூகுள்பே க்யூ.ஆர் கோடை அனுப்பி ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் பணத்தை அனுப்பி விடுவதாகத் தெரிவித்தார்.

இதையும் நம்பிய நடிகை கூகுள் பிளே கோடை ஸ்கேன் செய்யும் பொழுது மீதமிருந்த 13000 பணத்தை நூதனமாக திருடி விட்டு போனை அணைத்து வைத்து விட்டார். மறுபடியும் தாம் ஏமாந்ததை உணர்ந்த நடிகை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலிசார் எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றப்பட்டது என்பதை கண்டு பிடித்து உடனடியாக அந்த வங்கிக் கணக்கை முடக்குமாறு சம்மந்தப்பட்ட வங்கியிடம் கோரிக்கையை வைத்து முடக்கினர்.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல் துறையினர் சமீப காலமாக மதுப் பிரியர்களைக் குறி வைத்து ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. பிரியா பானர்ஜி உடனடியாகத் தகவல் கொடுத்ததால் பணத்தை திரும்பப் பெறுவதற்கும், குற்றவாளிகளைக் கண்டறியவும் முடிந்தது. மோசடியில் ஈடுபட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close