ரஜினியின் தர்பார் தகர்த்தெறிந்த சாதனைகள்! குஷியில் ரஜினி ரசிகர்கள்!

  சாரா   | Last Modified : 24 Dec, 2019 01:37 pm
rajini-s-darbar-records


ரஜினிக்கு எதிராக தமிழகம் முழுக்க எதிர்ப்பு அலைகள் வீசிய போதிலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் இணையத்தில் வெளியான தர்பார் டிரைலரும், லிரிக்கல் வீடியோக்களும் அடுத்தடுத்து சாதனைகளைப் புரிந்து வருகிறது.

இதன் மூலம் தனக்கெதிராக களம் காணுபவர்களுக்கு சாதனைகள் மூலம் பதிலளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் வெளியான தர்பார் டிரைலர்  10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இன்று வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


அதோடு மட்டுமில்லாம் தர்பார் படத்தின் கிழி கிழி லிரிக்கல் வீடியோ 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னமும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே போல் தனிவழி லிரிக்கல் வீடியோவும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. 

ஒரே நேரத்தில் வெளியான லிரிக்கல் வீடியோவும் டிரைலரும் இவ்வளவு பார்வையாளர்களைச் சென்றிருப்பது திரை உலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close