கள்ளக்காதல்? நடிகையின் கணவர் தற்கொலை!

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 04:02 pm
tv-serial-actress-husband-suicide

சென்னை அண்ணாநகரில் பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் நடிகையின் கணவர், தான் பணிபுரிந்த அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் 26-ஆம் தேதி காலை, ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்கச் சென்றார். அப்போது அலுவலகத்தின் கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறைக்குள் கோபிநாத் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்துக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் இவர், டி.வி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கோபிநாத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால் தம்பதியருக்கு இடையே நாளுக்கு நாள் பிரச்னை அதிகரிக்க, இருவருக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. மேலும் கடன் பிரச்னையும் கோபிநாத்திற்கு இருந்துள்ளது. சூழலில், வழக்கம் போல் கோபிநாத்துக்கும், ரேகாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர், தனது அலுவலகத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அலுவலகத்திற்கு மொத்தம் 3 சாவிகள் இருப்பதாகவும், அதில் ஒன்று கோபிநாத்திடம் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, கோபிநாத்தின் தற்கொலைக்கு வேறு ஏதும் மர்மங்கள் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close