கள்ளக்காதலில் என் கணவர் இல்லை.. நடிகை ரேகா தகவல்..

  அனிதா   | Last Modified : 03 Jan, 2020 04:01 pm
not-my-husband-rekha

சீரியல் நடிகை ரேகாவின் கணவர், கோபிநாத் கள்ளக்காதல் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால், அவருடைய அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியான நிலையில், அவர் எனது கணவர் அல்ல என நடிகை  ரேகா கூறியுள்ளார். ஓவியா, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரேகா. இவரது கணவர் கோபிநாத்க்கும் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஒருவருக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாகவும், இதனால் நடிகை ரேகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், மன உளச்சல் காரணமாக அவரது கணவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இது சின்னதிரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சீரியல் நடிகை ரேகா, கள்ளக்காதல் பிரச்சனையில் உயிரிழந்தது எனது கணவர் இல்லை என்றும், தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்தின் மனைவி பெயர் ஜெனிபர் ரேகா என்றும் தெரிவித்துள்ளார். அது தெரியாமல் தன்னுடைய புகைப்படத்தை போட்டு செய்திகள் வெளியிட்டுள்ளதாகவும், அந்த ரேகா நான் இல்லை எனவும் கூறியுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close