ஆத்திரத்தில் கொலை செய்த நடிகை! அதிர்ச்சியில் திரையுலகம்! 

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 04:01 pm
four-arrested-including-actress-for-murdering-actor

சென்னையில் துணை நடிகரை கொலை செய்த துணை நடிகை மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொரட்டூரில் வசித்து வரும் தேவி என்பவர், நாயகன் படத்தில் துணை நடிகையாக நடித்தவர். சில தொலைக்காட்சித் தொடர்களிலும் தேவி நடித்துள்ளார். இவருக்கும், ரவி என்ற துணை நடிகருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. இதனை தேவியின் கணவர் சங்கர் கண்டித்துள்ளார். இதையடுத்து வடபழனியில் இருந்து கொரட்டூருக்கு தேவியின் குடும்பம் இடம் பெயர்ந்துள்ளது. ஆயினும், ரவி, தேவிக்கு அடிக்கடி தொலைபேசியில் பேசி தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தேவியின் தங்கை லட்சுமியை சந்திக்க வேண்டும் என்றும், மறுத்தால் தங்கை மகனை கடத்தப் போவதாகவும் கூறி ரவி மிரட்டியதோடு, கொளத்தூரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கும் சென்றுள்ளார். குடிபோதையில் தகராறு செய்த ரவி, தேவியின் தங்கை லட்சுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையறிந்து அங்கு சென்ற தேவி, அவரது கணவர் சங்கர், லட்சுமி, அவரது கணவர் சவரியார் ஆகியோர் ரவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது சுத்தியலால் தேவி தாக்கியதில் ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ரவி உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த தேவி உள்ளிட்ட 4 பேரும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். நால்வரையும் கைது செய்த காவல்துறையினர், கொல்லப்பட்ட ரவியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close