பிகினியில் புத்தாண்டு கொண்டாடிய பிரபல நடிகை!

  முத்து   | Last Modified : 02 Jan, 2020 04:33 pm
kajal-agarwal-new-year-celebration

நடிகை காஜல் அகர்வால் பொதுவாக கவர்ச்சியான உடைகளுடன் இருக்கக் கூடிய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதில்லை. ஆனால் மாலத்தீவில் உள்ள ரெசார்ட்டில் இருந்து நீச்சல் உடையில் எடுத்த படுக் கவர்ச்சியான  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

நடிகைகள் அமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது தொடர்ந்து க்ளாமர் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போது, நான் மட்டும் ஏன் தயங்கி நிற்க வேண்டும் என்று நடிகை காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருப்பது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைந்து ஷேர் செய்து வருகிறார்கள். 

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார் காஜல்.  நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். புத்தாண்டைக்  கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றிருக்கும் காஜல் அகர்வால், அங்குள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டில் தான் தற்போது தங்கியிருக்கிறார். ஃபாரு ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தான் இந்த படு கவர்ச்சியான போட்டோக்களை அவர் எடுத்துள்ளார்.

 

காஜல் அகர்வாலுடன் அவரது தங்கை மற்றும் தங்கையின் மகன் ஆகியோரும் உடனிருந்தனர். நீச்சல் குளத்திற்கு கருப்பு கலந்த பலவண்ண பிகினி உடை, பீச் போட்டோஷூட்டிற்கு தனி உடை என விடுமுறையை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close