ஏக்கத்துடன் பார்த்த கவின்.. கண்டுக்கொள்ளாமல் சென்ற லாஸ்லியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 03:07 pm
losliya-award-function-clips

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. கடந்த 2 சீசன்களை விடவும் இந்த சீசன் அதிக ரசிகர்களை ஈர்த்தது. இதில் சீரியல் நடிகர் கவின் உட்பட 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் லாஸ்லியாவும் போட்டியாளராக பங்கேற்றார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு காதல் மலர்ந்தது. இதனால் பல பிரச்சனைகளும் உருவானது. இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர்கள் இருவரும் வெளியே வந்த பிறகு ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் லாஸ்லியாவுக்கு விருது வழங்கப்பட்டது. விருது வாங்க செல்லும் போது, கவின் முதல் வரிசையில் இருந்த போதும் அவரை கண்டு கொள்ளாமல் சென்ற லாஸ்லியா, அவருக்கு அருகில் இருந்த ஒருவருக்கு கை கொடுத்துவிட்டு மேடைக்கு சென்றார். இந்த செயல் கவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close