உலகம் முழுக்க விமானத்தில் பறக்கும் ரஜினி! களை கட்டும் தர்பார்!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 03:07 pm
darbar-publicity-in-flights

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167-வது படம்.

                                 

                                

ஜனவரி 8ம் தேதி கடல் கடந்து உலக நாடுகளில் ‘தர்பார்’ வெளியாகவுள்ள நிலையில்,  படத்தின் விளம்பர வேலைகளை லைக்கா தீவிரப்படுத்தியுள்ளது. கபாலி திரைப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணு கடைபிடித்த விமானத்தில் விளம்பரம் செய்த யுக்தியை இம்முறை லைக்கா நிறுவனம் அச்சு பிசகாமல் காப்பியடித்துள்ளது. விமானங்களில் தர்பார் ரஜினியைப் பார்த்த பரவசத்தில் சூப்பர் ஸ்டார்  ரசிகர்கள் #DarbarFlight டேக்-ஐ ட்வீட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close