‘அவதார்’ பட நடிகர்களுடன் கரம் கோர்க்கும் பிரபல தமிழ் ஹீரோ!

  சாரா   | Last Modified : 03 Jan, 2020 03:06 pm
avatar-film-cast-in-tamil-cinema

உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ‘அவதார்’ படம் ஆஸ்கர் உட்பட பல விருதுகளை அள்ளி குவித்தது. இன்று வரையிலும் ரசிகர்கள் அவதார் படத்தை பிரமிப்புடனும், ஆச்சர்யத்துடனுமே பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், அவதார் படத்தில் நடித்திருந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் நடிக்க இருக்கிறார்கள். 

ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய தமிழ் படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.

மேலும் இந்தப் படத்தில் பிரபல தமிழ் பட ஹீரோ ஒருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இம்மாதம் 26ம் தேதி படத்தின் தமிழ் ஹீரோ யார் என்று சஸ்பென்ஸை உடைக்கிறார்கள்.  தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது.

இந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close