காமெடி நடிகரை பரிந்துரை செய்த நயன்தாரா

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 11:19 am
nayanthara-requested-director-to-cast-yogi-babu-in-her-next

இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்தில் யோகி பாபுவை நடிக்க வைக்குமாறு நயன்தாரா பரிந்துரை செய்துள்ளார். 

புதுமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுசிச்சி டி' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் நயன்தாராவை கவர நடிகர் யோகி பாபு முயற்சிக்கும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் நயன்தாரா. லட்சுமி, மா என சர்ச்சைக்குள்ளான குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஹாரர் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. 

இந்நிலையில் இந்த படத்தில் யோகி பாபுவை நடிக்கவைக்க இயக்குநரிடம் நயன்தாரா பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் நடிப்பு நயன்தாராவிற்கு மிகவும் பிடித்து போனதால் அவருக்கு பரிந்துரை செய்தார் என்று கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close