நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி -6 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-6
விஜய்யை சீண்டிய நண்பர்கள்...! “நடிக்க ஆசைப்பட்டா போதாது, முதலில் அதற்குத் தகுதியானவனா விஜய்யைத் தயார்படுத்தினேன். அவனை, அதிகாலை 4.30 மணிக்கு எழுப்பி; ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் பீச்சுக்குப் போவோம். ஓடுற குதிரையில் தாவி ஏற வைப்போம், குதிரை மீது ஏறி நிற்க வைத்து; பிறகு தள்ளிவிட்டு தாவி கடலில் குதிக்க வைப்போம். நடிகனுக்கு முதல் தகுதியே, ஆக்சன் கட்சிகளில் சாகசம் செய்யணும், நடனம் ஆடத் தெரியணும்! அப்பத்தான்; அந்த ஹீரோவை குழந்தைகளும் விரும்பும். ஆகவே, ஆக்‌ஷன் - நடனம் இந்த இரண்டிலும் தேறிட்டாப் போதும் ஹீரோவாகிடலாம். நல்ல கதை வச்சிருக்கும் மற்ற இயக்குநர்கள் நடிக்க வச்சிருவாங்க! ஆக்‌ஷன், டான்ஸ் இந்த இரண்டையும் வச்சு நான், விஜய்யை ஹீரோவக்கினேன்” என மகனைப் பற்றி பெருமை பொங்க சொல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். “நான் ஆக்‌ஷன் ஹீரோவகணும்னு ஆசைப்பட்டேன். என்னோட முதல் படமே ஆக்‌ஷன் படமா அமைஞ்சது. ஷூட்டிங் ஸ்பாட்ல அப்பா, மகன் சென்டிமென்ட்லாம் கிடையாது. ‘பார்வையிலயே ஒன்னோட கோபத்த காட்டணும் விஜய்! கண்ணு சிவக்கணும், கன்னம் துடிக்கணும். நிஜத்துல ஒனக்கு இப்படியொரு துரோகம் நடந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவியோ, அப்படிப் பண்ணிக்காட்டு’னு ஒரு ‘கறார்’ டைரக்டரா தான் வேலை வாங்கினார். நிஜத்தில் நான் ரொம்பவும் சாது! வீடே அதிரும்படி கத்தறது, கையில கிடைக்கறத எடுத்து அடிக்கறது... இது எதுவுமே எனக்கு வராது. இந்த சாது கேரக்டர் சினிமாவுக்கு செட்டகுமா? கேமரா முன்னாடி நிக்கும் போது என்னோட ஒரிஜினல் கேரக்டர ஓரம் கட்டி வச்சுட்டு; கதைக்குள் புகுந்து அந்தக் கேரக்டராவே மாறிடுவேன்” என தனது முதல் பட அனுபவத்தை கொஞ்சம் அசைபோட்டார் விஜய். 1992–ல் விஜய், லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு மாணவர். அப்போது, நாளைய தீர்ப்பு படப்பிடிப்பு லயோலா கல்லூரி வளாகத்திலேயே நடந்தது. விஜய் நடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்த சக மாணவர்கள், ‘ஹேய்... இவென்லாம் ஹீரோவா? என்னடா இது, தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை?’ என சிலர் கிண்டலும், கேலியும் செய்தார்கள். அப்பா டைரக்டர்னா, மகன் ஹீரோவா? முக லட்சணம் தேவையில்ல? என வேறு சிலர் காயப்படுத்தினார்கள். அத்தனை அவமானங்களையும் சகித்துக் கொண்டு நடித்தார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்தார். ராதாரவி, மன்சூரலிகான், ஸ்ரீவித்யா போன்ற சீனியர் நட்சத்திரங்களும் இருந்தனர். நீதிமன்ற வாதங்களுக்கு புகழ்பெற்ற; ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அத்தாரிடியாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது வழக்கமான பாணியில் படத்தை இயக்கினார். படம் வெற்றிபெற்றதா? விஜய்க்கு வரவேற்பு எப்படி? நாளைப் பார்க்கலாம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close