நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 12 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 26 Oct, 2017 07:08 pm

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-12
ஹீரோ, ஆன்டி ஹீரோ, காமெடி ஹீரோ... கொடுத்த வேடத்தில் பின்னி பெடலெடுத்த விஜய்! லவ் டுடே, காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் என அடுத்தடுத்து அமைந்த படங்கள் விஜய்யை எல்லோருக்குமான நாயகனாக மாற்றி, அவரின் மார்க்கெட் எல்லையை விரிவாக்கியது. அந்த ஐந்து படங்களுமே வெளி இயக்குநர்களிடம் விஜய் தன்னை ஒப்புக் கொடுத்து நடித்த படங்கள் என்பது தான் சிறப்பு! விஜய்க்கு நல்ல இமேஜ் வரக் காரணமாக இருந்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், விஜய் நடித்த படம் ‘லவ் டுடே’. லவ் டுடே படத்தில் விஜய் ஏற்றுக் கொண்ட கேரக்டர், பொறுப்பில்லாத பிள்ளையாக; விருப்பமே இல்லாத பெண்ணிடம்; கட்டாயப்படுத்தி ‘காதல் யாசகம்’ கேட்கும் காதலன் கதாப்பாத்திரமாகவே இருந்தபோதிலும், அவரின் இயல்பான நடிப்பு; ‘பக்கத்து வீட்டுப் பையன்‘ என்கிற ஒரு எதார்த்தமான உணர்வை ஏற்படுத்தியது. தாமதமாகத் தன் காதலை வெளிப்படுத்திய காதலியைத் தூக்கி எறியும் இளைஞனாக; கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களைத் தனது உணர்ச்சிகரமான நடிப்பால் வசியப்படுத்தினார் விஜய். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி; காதலை ஏற்காத பெண்களின் பின்னால் அலைந்த இளைஞர்களின் ‘பித்தம்’ தெளிய வைத்தது! இந்தப் படத்திலிருந்து தான் விஜய்யின் டான்ஸ்க்கு மவுசு வந்தது. ஜீன்ஸ் சட்டை, ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டுடன், கேஷுவல் ஷூ சகிதமாய் ஆரம்பக் காலப் படங்களில் வந்த விஜய், கூலிங்கிளாஸ், பிளேசர், லெதர் ஷூ, செமி ஃபார்மல்ஸ், ஹேர் ஸ்டைல், ஸ்லிம் லெஸ் கிளாஸ், நடை உடை பாவனை... என விஜய், புதிய தோற்றத்துக்கு மாற ஆரம்பித்தார்! இந்த ‘நியூ லுக்’ இளைஞர்களையும், இளம் பெண்களையும் வசீகரம் செய்ததால்; இதே ஸ்டைலை ஃபாலோ பண்ணினார். இளமை துள்ளும் புதுவகையான உடைகளை; ஆடை வடிவமைப்பாளர்களிடம் விரும்பிக் கேட்டு அணிய ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில், சூர்யாவுடன், விஜய் இணைந்து நடித்த படம் ‘நேருக்கு நேர்’. இந்தப் படத்தில் தான் சூர்யா அறிமுகமானார். நேருக்கு நேர் படத்தைப் பொறுத்தவரை சூர்யாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்; விஜய்க்கு கொடுக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்! ஆனாலும், தனக்குத் தரப்பட்ட கதாப்பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் விதத்தில் நடித்தார் விஜய். விஜய்-சூர்யா இருவரின் நேர்த்தியான நடிப்பு, சிம்ரன்- கௌசல்யாவின் இளமை துள்ளல், இயக்குநர் வசந்தின் இயக்கம், தேவாவின் இனிய இசை... என எல்லாமும் சேர்ந்து படத்தை ஹிட் ஆக்கியது. அடுத்து வந்த ‘நினைத்தேன் வந்தாய்’, முக்கோணக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கலகலப்பான படம். விஜய்க்குள் இருந்த அந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் ஸ்க்ரிப்ட் இருந்ததால் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காமெடியில் கலக்கினார். விஜய்யின் காமெடி நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் இந்தப் படமும்; விஜய்யின் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது. ‘மென்மையான ஹீரோ இமேஜ்’ உருவாகியிருந்த நேரத்தில், அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து; முதல் முறையாக ‘ஆன்டி ஹீரோ’ கேரக்டரை தைரியமாக ஏற்று விஜய் நடித்த படம் ‘ப்ரியமுடன்’. காதலுக்கு இடையூறாக யார் வந்தாலும்; அவர்களை அழித்தொழிக்கும் காதல் வெறியனாக வந்து மிரள வைத்தார் விஜய். காதலுக்குக் குறுக்கே நிற்கும் காதலியின் தந்தையையே கொலை செய்யத் துணியும் ஆக்ரோஷமான இளைஞனாக, ‘ஆன்டி ஹீரோ’வாக உருமாறிய போது இன்னொரு விதமான ரசிகர்களைக் கவர்ந்தார்! இந்தப் படத்தின் வெற்றி விஜய்க்கு ஒரு திருப்பத்தைத் தந்தது. இந்தப் படங்களில் விஜய் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களைப் பார்க்கும் போது அவரது நடிப்பில் படிப்படியான முன்னேற்றம் தெரிந்தது. அதற்கு முன்பு அவர் மீது பதிக்கப்பட்டிருந்த முத்திரையை மாற்றிய கதாப்பாத்திரங்களாக அமைந்தது. இந்தப் படங்களின் அதிரடியான வெற்றியின் வாயிலாக; விஜய்க்கு வெகு ஜனங்களின் அங்கீகாரம் கிடைத்தது. விஜய்க்கு திடீரென அமைந்த சில படங்கள் அவரை எல்லோருக்குமான நாயகனாக மாற்றி, அவரின் மார்க்கெட் எல்லையை விரிவாக்கியது. அடுத்தடுத்து வந்த அந்தப் படங்கள் ஹிட்டாக; விஜய்யின் லெவல் மாறியது. விஜய்யை நட்சத்திர நாயகனாக மாற்றிய அந்தப் படங்கள்..? நாளைப் பார்க்கலாம்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close