நேற்று... இன்று... நாளை... தளபதி பயோகிராஃப்: பகுதி - 18 #VijayVictoryStory

  பால பாரதி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

thalapathy-biography-the-story-of-how-vijay-conquered-kodambakkam-part-18


ரூட்டை மாற்றிய எஸ்.ஏ.சி! 

பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை ப்ரியமானவளே என ஒரே ஸ்டைல் கதைகளில் விஜய் நடித்துவந்தபோது அதற்குத் தடை போட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன். “‘விஜய் நல்ல நடிகன்’னு பேர் வாங்கறது மட்டுமே வெற்றி இல்ல! ‘விஜய் நடிச்சா படம் கமர்ஷியலா ஹிட் ஆகும். நாலு குடும்பம் நல்லா இருக்கும்’னு சொல்றது தான் ஒன்னோட உண்மையான வெற்றியா இருக்கும்!” என மகனுக்கு ஆலோசனை சொன்னார். 

ஆனால், விஜய்க்கு அதில் விருப்பம் இல்லை. ஃபீலிங்கான படங்கள் தான் சேஃப்ட்டி. மென்மையான படங்களில் நடித்து விட்டு, உடனே ஒரு மசாலாக் கதையில் எப்படி நடிக்க முடியும்? என்பது விஜய்யின் வாதம்! “க்ளாஸ் படங்கள் முக்கியம்தான், ஆனா; அதை விட முக்கியம் மாஸ் படங்கள்! க்ளாஸ் படங்களுக்கு உள்ளூருக்குள் தான் மரியாதை, ஆனா, மாஸ் படங்களுக்கு உலகம் முழுக்க மரியாதை! நீ மாஸ் ஹீரோவா மாறணும்னு நான் ஆசைப்படறேன். எனக்காக ரெண்டு கமர்ஷியல் படம் பண்ணு, பிடிக்கலேன்னா விட்ரு!” என விடாப்பிடியாக நின்று மகனின் ரூட்டை மாற்றிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன். 

‘அனுபவசாலியான அப்பா விடாப்பிடியாக நிற்கிறார்னா, அதில் நிச்சயமா அர்த்தம் இருக்கும் என நம்பி அவர் சொல்வதைப் போல ரெண்டு படம் பண்ணித்தான் பார்ப்போமே’ என்கிற முடிவுக்கு வந்து, கமர்ஷியல் கோதாவில் குதிக்கத் தயாரானார் விஜய். 

தொழிலதிபர் மகளை, ஒரு மெக்கானிக் காதலித்து, ஏக கலாட்டாக்களுக்குப் பிறகு அவளைக் கை பிடிக்கும் கதையை, சிபாரிசு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். கிட்டத்தட்ட ரஜினியின் பழைய பார்முலாவில் இருந்த, ரொம்பவும் ‘வீக்’கான அந்தக் கதை மீது விஜய்க்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை! அப்பாவின் பேச்சை மீறக் கூடாதே என்பதற்காக அந்தக் கதையில் நடிக்கச் சம்மதித்தார் விஜய். 


பாஸ் ஆனாப் போதும், என நினைத்த அந்தப் படம் ‘மாஸ்’ ஆன படமாக மாறியது. ஸ்டைலாகச் சிகரெட் பிடித்துக் கொண்டு, டயலாக் பேசியபடியே ஃபைட் செய்து கொண்டு, சென்னை தமிழ் பேசிக் கலக்கிய ஒரு சாதாரண மெக்கானிக்காக வந்த விஜய்யை, ரசிகர்கள் அப்படியே மொத்தமாக அள்ளிக் கொண்டார்கள். 

2003 ஆம் ஆண்டுத் தீபாவளி திருநாளில் வந்த அந்த மாஸ் படம் ‘திருமலை’. கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த ‘திருமலை’யை ஆ.கே.செல்வ மணியின் சீடரான ரமணா இயக்கினார். விஜய் ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.

‘திருமலை’ வெற்றிக்குப் பிறகு தான், ‘கமர்ஷியல்’ங்கறது எவ்வளவு பெரிய மேட்டர் என விஜய்க்கு தெரிய வந்தது. பின்னாளில் விஜய் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக மாறத் திருமலை தான் அடித்தளமாக இருந்தது. 

எஸ்.ஏ.சந்திரசேகரன், சூரியன் ஆர்ட்ஸ் என்கிற பெயரில் சொந்தப் படக் கம்பெனி ஆரம்பித்த போது, அதன் முதல் படமான ‘ஆதி’யை இயக்கும் பொறுப்பைத் திருமலை இயக்குநர் ரமணாவிடம் தான் ஒப்படைத்தார் எஸ்.ஏ.சந்திர சேகரன். 

“ ‘ஆதி’ன்னா ‘முதல்’னு அர்த்தம். அப்படிப் பார்த்தால் என்னோட ‘ஆதி’ விஜய் தான்! டைரக்டரா ஆகணும்னு கோடம்பாக்கத்துக்கு வந்து ஆர்.கே.செல்வமணி படங்கள்ல அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணி, தனியா படம் பண்ணலாம்னு ஒரு ஆக்‌ஷன் கதையை எழுதி, ஹீரோவுக்காகக் காத்திருந்தேன். தரணி, ராதா மோகன், விஜினு பிரமாதமான நண்பர்கள் எனக்கு. ஒரு நாள், ‘விஜய்க்கு கதை சொல்லிப் பாறேன்’ என்றார்கள். 


எனக்கு நம்பிக்கை இல்லை. அவர், ‘கிளாஸ்’ படம் பண்ணணும்னு ஓடிக்கிட்டிருகார். என்கிட்டே இருக்கறது ‘மாஸ்’ கதை! அத எப்படி ஓகே பண்ணுவார்?னு அவங்ககிட்ட சொன்னேன். ‘முயற்சி பண்ணிபாரு’னாங்க. அவங்களோட திருப்திக்காக நம்பிக்கையே இல்லாமத் தான் எஸ்.ஏ.சி சாரைப் பாத்து கதைய சொன்னேன். அவருக்குக் கதை பிடிச்சிருந்தது. ‘கதைய விஜய்க்கும் சொல்லிருப்பா..!’ன்னார். 

விஜய் சாரைப் பாத்து கதை சொல்லப் போனா, ஒரு சின்னப் புன்னகையோட மௌனமா உட்கார்ந்திருந்தார். மூணு மணி நேரம் முகத்துல எந்த எக்ஸ்பிரஷணும் இல்லாம அமைதியா உட்கார்த்திருக்கற ஒருத்தர்கிட்ட கதை சொல்றதே சவாலான வேலை தான். ஆனா, அந்தச் சவாலில் நான் ஜெயித்தேன். 

‘குட், நாம செய்வோம்னு எழுந்து நின்னு கை கொடுத்து, அனுப்பி வச்சுட்டார். அந்தக் கதையையும், அவரையும் நான் விடவே இல்ல! எஸ்.ஏ.சி சாரை விடாம் துரத்தி, விஜய் கால்ஷீட்டை வாங்கிட்டேன்” என ‘திருமலை’ பட அனுபவத்தை ரீவைண்ட் செய்தார் இயக்குநர் ரமணா. 

‘திருமலை’ படம் மூலமா விஜய்க்கு ஒரு கோடு தான் போட்டுக் கொடுத்தார் இயக்குநர் ரமணா. பிறகு, விஜய்; அதில் ரோடு போட்டு, ரன்வே போட்டு; என ‘திருமலை’ பட அனுபவத்தை ரீவைண்ட் செய்தார் இயக்குநர் ரமணா. இப்போது வரை சிவகாசி ராக்கெட்டாய் சீறுகிறார் விஜங். 

‘திருமலை’ படம் மூலமாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த விஜய், அதைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்தார் தெரியுமா? 

திங்கட் கிழமை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.