டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

  டேவிட்   | Last Modified : 21 Jul, 2018 05:44 pm

how-dubsmash-hero-vishnu-unnikrishnan-got-serial-gig

வாட்ஸ்அப் , ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இவை மூன்றும் இருந்துவிட்டாலே போதும் இந்த கால இளைஞர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு நேரம் கிடைத்துவிடும். இதையெல்லாம் தாண்டி மியூசிக்கலி டப்ஸ்மாஷ் என்ற சமூக வலைத்தளங்கள் எல்லா வயது மக்கள் மத்தியிலும் வைரலாகி கொண்டிருக்கிறது. அவரவர் நடிப்பு திறனை வெளிக்கொண்டுவரும் தளமே இந்த டப்ஸ்மாஷ். ஒரு டப்ஸ்மாஷ் வீடியோ செய்வதற்காகவே சிலர் இதையே வேலையாக கொண்டு சுற்றி திரியிறார்கள்.  

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இணையதள நட்சத்திரங்களுக்கும் ரசிகர் பட்டாளம் அமைவது வியப்பாக இருக்கிறது. ஒரு மலையாளி தமிழ் படம் வசனங்களை டப்ஸ்மாஷ் செய்து சமூகவலை தலத்தில் பிரபலமாகுவது வியக்கவைக்கும் உண்மையே. நண்பர்களோட சேர்ந்து குறும்பு தனமாக டப்ஸ்மாஷ் செய்ய ஆரம்பித்தவர் விஷ்ணு உண்ணிகிருஷ்ணன். சினிமா துறையில் ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த டப்ஸ்மாஷ் ஹீரோ விஷ்ணுவிடம் சில கேள்விகள்...

சமூக வலைத்தளத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரசிகர்கள் பெற்று பிரபலமாவீர்கள் என்று எதிர்பார்த்தது உண்டா?

"நான் சென்னை வந்த புதுசுல கேமரா கத்துக்க வேண்டும் என்று தான் முதலில் யோசித்தேன். அதிகம் தமிழ் பேச தெரியாதது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நண்பர்களோடு சேர்ந்து பொழுதுபோக்கிற்கு டப்ஸ்மாஷ் செய்ய ஆரம்பித்தேன் . அதை பலரும் ரசிச்சு பாராட்ட ஆரம்பிக்கும் போது தான் இன்னும் அடிக்கடி கிரியேட்டிவ் விடீயோக்களை செய்ய தோணுச்சு. மூணு, நாலு மாசம் அப்புறம் ரசிகர்கள் திடீரென்று அதிகரிக்க ஆரம்பித்தனர். இப்போ என்னோட இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரசிகர்கள் இருப்பது நான் எதிர்பார்க்காத ஆச்சிரியப்படும் விஷயம் தான்."

நீங்க ஒரு இன்டர்நெட் பிரபலம் என்று பெருமைபட் டது உண்டா ?

"பிரபலம், ஹீரோ அப்டிலாம் சொல்றத விட நானும் ஒரு சராசரி மனிதன் என்று சொல்லவே பெருமைபடுறேன் . இன்டர்நெட்டில் பிரபலம் ஆனது மூலம் சில குறும்படங்களும் ஆல்பம் பாடல்கள் வாய்ப்பும் கிடைச்சது .கேமரா வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வந்தது. ஏதோ ஒரு வேலை செய்தாவது சினிமாவுக்குள் போகணும் என்ற ஆசையோடு நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இன்னும் பல இளைஞர்கள் திறமைகளோடு சாதிக்க  காத்திருக்காங்க. அவங்க திறைமைகளை வெளிக்காட்ட இந்த சமூக வலைத்தளம் ஒரு நல்ல இடம்."

விஜய் டிவி சீரியல் அனுபவம் எப்படி இ ருக்கு ?

"சீரியல் நடிப்பேன்னு எதிர்பார்க்கவேயில்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் விஜய் டிவி சீரியல் "சரவணன் மீனாட்சியில்" நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜாலியான பட்டணத்து பையனாக கிராமத்துக்கு வரும் துறுதுறுப்பான கதாபாத்திரத்தில நடிச்சிட்டு இருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போமே கலகலப்பாக இருப்போம். அதுனால என்னவோ இந்த சீரியல் அனுபவம் எனக்கு போர் அடிக்காம ஜாலியா இருக்குதுனு சொல்லலாம்."

அடுத்து ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைத் ததா?

" 'மை சன் இஸ் அ கே' திரைபட டைரக்டர் லோகேஷ் அடுத்து என்-4 என்று ஒரு படம் எடுக்கவுள்ளார். அந்த திரைபடத்தில் சன் டிவி சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்கவுள்ளார். நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன். ஆகஸ்ட் மாதம் சென்னை கடலோர பகுதிகளான காசிமேடு, ராயபுரம் போன்ற இடங்களில் ஷூட்டிங் செய்யப்போவதாக சொல்லிருக்காங்க. இது எனக்கு முதல் படம் என்பதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல் நிறைய பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கலை விழாக்கில் என்னை நடுவராகவும் கூப்பிடுகின்றனர்."

பள்ளி கல்லூரி விழாக்களுக்கு நடுவராய் சென் றபோது மறக்க முடியாத சில நிகழ்வுகள்?

"பள்ளி ,கல்லூரி விழாக்களில் நான் விருந்தினரா போகிறப்போ எதிர்பாக்காத அளவுக்கு வரவேற்பு கிடைக்குது. அது ரொம்ப சந்தோஷமா இருக்கும். மீடியா ஆட்கள் வரும்போது கொடுக்கிற அளப்பரையும் வரவேற்பும் எங்கள மாதிரி சோசியல் மீடியா செலிபிரிட்டிக்கும் கிடைச்சது ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அங்க இருக்க மாணவர்கள் வந்து கூட செல்பி எடுத்துக்குவாங்க. சில விழாக்களில் நடுவராகவும் போயிருக்கேன். நமக்கு இவளவு ரசிகர்களா என்று பல முறை வியந்திருக்கேன்."

ஃபேஷன் போட்டோகிராபராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் இன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இணையத்தலமே இதற்கு முழுக்காரணம் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தன் வலைதள பக்கத்தில் எந்த ஒரு வீடியோ, போட்டோ போட்டாலும் வைரலாகி விடும். நாமும் விஷ்ணு போலவே டப்ஸ்மாஷ் செய்து பிரபலமாகலாம் என்று யோசிக்கும் பல இளைஞர்கள் டப்ஸ்மாஷ் செய்வதை மட்டுமே வேலையாக கொண்டு நேரத்தை வீணாக்காமல் ஏதேனும் உபயோகமாக செய்யலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close