யார் இந்த ஸ்ரீ ரெட்டி? லீக்ஸ்களின் பின்னணி என்ன?

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 06:07 am
who-is-sri-reddy

தமிழ், தெலுங்கு என திரையுலகை தற்போது அதிர செய்யும் பெயர் ஸ்ரீ ரெட்டி. அவருடன் பழகியவர்களுக்கு அடுத்த என்ன வீடியோ வருமோ, அடுத்து என்ன போட்டோஸ் வருமோ என்ன பதட்டத்திலே சுற்றிவருகின்றனர். ஆனால் ஸ்ரீ ரெட்டியின் புகார்களை மீடியாக்கள்தான் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ்களை பெரிதுபடுத்துகின்றனவா? குற்றஞ்சாட்டப்பட்ட திரைப்பிரபலங்கள் அமைதிகாப்பது ஏன் என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

முக்கிய நடிகர்கள் மீதும், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார்களை தொடர்ந்து முன்வைக்கும் ஸ்ரீ ரெட்டியின் போராட்டம் முதன்முதலில் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட‌ வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போர‌ட்டமாக தொடங்கி தற்போது தமிழ் திரையுலகம் வரை விஸ்வரூபம் எடுத்துள்ளார். 

தெலுங்கு திரையுலகினரை குற்றஞ்சாட்டிவந்த ஸ்ரீரெட்டி, தனது முகநூல் பக்கத்தில் தமிழ் லீக்ஸ் என்ற பக்கத்தில் தமிழ் பிரபலங்களின் பெயர்களுடன் குற்றச்சாட்டுகளை பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களுக்கும் திரையுலகினர்களுக்கும் பேர் இடியாய் இருந்தது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என முன்னணி பிரபலங்களை வம்புக்கு இழுத்துள்ளார். இவர்கள் படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

இந்த பயணம் தொடராது இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே உள்ளது. இன்னும் பல ரகசியங்களை வெளியிடுவேன் என பகிரமங்கமாக கூறினார். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து மிரட்டல் வருவதாகவும், குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அண்மையில் நடிகர் கார்த்தி ஸ்ரீ ரெட்டி கூறும் குற்றஞ்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? என வினவியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ரெட்டி, ஆதாரம் வீடியோவாக இருக்கு என கூற திரையுலகினர் மிரண்டு போகியுள்ளனர். சுசி லீக்ஸ் மாதிரி இது என்னடா ரெட்டி லீக்ஸ் இன்னும் என்னென்ன லீலைகள் வெளிவருமோ? என்ற எதிர்ப்பார்பில் ரசிகர்களும், அச்சத்தில் திரையுலகினரும் மூழ்கியுள்ளனர். 

தான் பாதிப்புக்குள்ளானதை தைரியமாக கூறும் ரெட்டிக்கு உண்மையில் நடந்தது என்ன? என விசாரிக்கும்போது, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடனும், திறமையுடனும் எண்ட்ரிக்கொடுத்த ஸ்ரீ ரெட்டிக்கு திரையுலகம் கொடுத்த அதிர்ச்சி கிவ்வன் டேக் பாலிசி, நீ எனக்கு கொடுத்தால், நான் உனக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்ற பகீர் அக்ரிமெண்ட்!  5 வருடமாக திரையுலகில் பயணிக்கும் ஸ்ரீ ரெட்டி இத்தனை வருடங்களுக்கு பின் இப்போது இந்த விஷயங்களை கூறுவது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. என்னை போன்று பலரும் பாதிக்கக்கூடாது என்ற காரணத்திற்காகவே இப்போது உண்மைகளை தெரிவித்துவருகிறேன் என சட்டென சொல்கிறார் ஸ்ரீ ரெட்டி!

படவாய்ப்புக்காக ஒரு பெண்ணாக என்னவேண்டுமானாலும் செய்துவிடலாமா? என நினைக்கும் நேரத்தில், நானும் நிறைய தவறுகள் செய்துள்ளேன் என ஓபனாக முன்வந்து மைண்ட் வாய்ஸ்க்கு பதிலளிக்கிறார் ஸ்ரீ ரெட்டி. என்னை போன்று எந்த பெண்ணும் இருக்ககூடாது. இதனால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தலைகுனிவுதான் என வருத்தத்துடன் கூறுகிறார். திரைத்துறையில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாலியல் ரீதியான பிரச்னை இருக்கும் என்றும், ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் வெளியே சொல்வதில்லை என்றும் தில்லாக சொல்கிறார்.

ஆனால் புகார்கள் கொடுத்தும், வெளியில் நடந்த குற்றங்களை சொல்லியும் குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை கிடைக்கவில்லையே என ஸ்ரீ ரெட்டி வருத்ததில் உள்ளார். ஸ்ரீரெட்டி கூறும் வார்த்தைகளும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் நம்புவதற்கு கஷ்டமாக உள்ளது... ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட திரையுலகினரின் அமைதியே ஸ்ரீரெட்டியி பதிவுகள் உண்மை என்பதை காட்டுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close