நடிகனாவது சுலபம் இல்லை - நாகேஷ் பேரன் பேட்டி

  கனிமொழி   | Last Modified : 22 Jul, 2018 11:29 pm
not-so-easy-to-be-an-actor-an-exclusive-with-nagesh-grandson

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனான கஜேஷ் நாகேஷ் ஆனந்த்,  ஹீரோவாக ‘ஸ்கூல் கேம்பஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஏஎம்என் குளோபல் குரூப் குழுவானது, ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி "ஸ்கூல் கேம்பஸ்" என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் டாக்டர்.ஆர்.ஜே.ராம நாராயணா இந்த படத்தினை இயக்கி, தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் பணியாற்றியுள்ளார்.  தேனிசை தென்றல் தேவா இசை அமைக்கிறார். மேலும் பிரபல பாடகர்கலான ஆஷா போஷ்லே, பி.சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த படத்தில் பாடியுள்ளனர். படத்தின் நாயகர்களாக ராஜ்கமல், கஜேஷ் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மதன் பாபு  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பள்ளி மாணவனாக நடிக்கும் கஜேஷிடம் சில சுவாரஸ்ய கேள்விகள்....


நீங்களும் சினிமாவில் நடிக்க வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?


சினிமாவுக்குள் வரணும் என்ற எண்ணம்  எனக்கு இருந்ததே இல்லை. எங்க தாத்தா அப்பா எல்லாருமே சினிமால நல்ல ஒரு இடத்தில இருந்ததுநால நானும் சினிமாவுக்கு வரணும் என்ற ஒரு கட்டாயம் இருந்துச்சு. சரி நம்ம அதிர்ஷ்டம்  சினிமாவுக்குள் போய் தான் பாப்போமேன்னு ஆரம்பிச்சது தான் இந்த சினிமா வாழ்க்கை.


நீங்கள் நடிக்க வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் ?


நான் நடிக்க வராம இருந்திருந்தா கண்டிப்பா இந்நேரம் ஒரு பெரிய கப்பலில் செஃப் ஆகிருப்பேன். முதல்ல நான் ஹோட்டல் மேனஜ்மென்ட்ல தான் இருந்தேன். என்னோட குடும்பம் மற்றும்  நண்பர்கள் எல்லோரோட ஆதரவும் ஆசிர்வாதமும் இருந்ததால் சினிமாவிற்கு வந்துட்டேன். சினிமாவில் பெரிய அளவில் ஜெயிக்கணும் என்ற லட்சியத்தோடு இப்போ போராடிட்டு இருக்கேன். நாகேஷ் தாத்தா ஆசிர்வாதங்கள் எப்போமே எனக்கு இருக்கறது நினைத்து சந்தோஷ படுறேன்.


ஸ்கூல் கேம்பஸ் படத்தின் அனுபவம் எப்படி இருக்கு ?


டாக்டர் ஆர்.ஜே ராம்நாராயணா இயக்கிவரும் படம் தான் ஸ்கூல் கேம்பஸ். அவரே தயாரித்தும் இருக்கிறார். ரொம்ப வித்தியாசமான அனுபவம் தான் இந்த ஸ்கூல் கேம்பஸ். படத்தில் நடிக்கிற எல்லா நடிகர்களும் ரொம்ப சீக்கிரமா நண்பர்கள்  ஆகிட்டாங்க. பல வருஷம் பழகினது போல தான் எங்க 2 மாசம் 2ஷூட்டிங் மகிழ்ச்சியா இருந்துச்சு. திரும்ப ஸ்கூல் படிக்கிற மாதிரியே பீல் வந்துடுச்சு. மொத்தத்தில் எங்க ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போதுமே கலகலப்பா தான் இருப்போம்.
 


இந்த சினிமா துறையில் நீங்கள் சந்தித்த கஷ்டங்களும் சவால்களும் என்ன?

நான் இந்த சினிமா துறைக்கு வந்து 7 வருஷம் ஆச்சு. ஆரம்பத்தில நாகேஷ் பேரன், எனக்கு ஏன் இந்த நிலைமை என்று யோசிப்பேன். பிறகு சக நடிகர்களுடன் பழகும் போது தான் தெரிஞ்சது எல்லார் வாழ்க்கையிலும் கஷ்டங்கள் இருக்கு. தினசரி வாழ்க்கையில வெளிய எங்கயாவது போகும் போது பிரைவசி இருக்காது. அதுவே ரொம்ப பெரிய விஷயம். நடிகனாவது சுலபம் இல்ல என்று புரிந்தது. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை தாண்டி ஜெயிக்கணும் அதுவே உண்மையான லட்சியம்.


 வாழ்கையின் மறக்க முடியாத சில நிகழ்வுகள் ?


 என்னோட வாழ்க்கையில நடந்த ஒவ்வொரு நிகழ்வுமே மறக்கமுடியாத ஒன்று தான். ஆனா குறிப்பாக சொல்லணும் என்றால் என்னோட பள்ளி பருவம் தான். அந்த நாட்கள் தான் என் குடும்பத்தோடு நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்த காலம்.
 
           வாழ்க்கையில் சிலர் அதிக பணம் சம்பாதிப்பார்கள் சிலர் சம்பாதிக்கமாட்டார்கள். பணத்தை தாண்டி வாழ்க்கைக்கு நிம்மதி தான் முக்கியம். எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் ஒரு பாதை அமையும் அதில் நிம்மதியாக சந்தோஷமாக பிறருக்கு துரோகம் நினைக்காமல் வாழ்ந்தாலே போதும் என்று சொல்கிறார் கஜேஷ்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close