15 இயர்ஸ் ஆஃப் தனுஷ் - பர்த்டே ஸ்பெஷல்!!

  டேவிட்   | Last Modified : 28 Jul, 2018 01:27 pm

dhanush-birthday-special

தமிழ் சினிமா எத்தனையோ கதாநாயகர்களை உருவாகியுள்ளது. நல்ல உடல் தோற்றம், முக அழகு, நல்ல நடிப்பு திறன் இவையெல்லாம் இருந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் ஹீரோவாக முடியும் என்ற ட்ரெண்டை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியது நம் தமிழ் சினிமா. இந்த தடைகள் எல்லாத்தையும் உடைத்து கதாநாயகனாக சினிமா துறைக்குள் நுழைவது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. 2002ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்று இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி பாடகர், படலாசிரியர் என்று பல ரூபங்கள் எடுத்துள்ள தமிழ் சினிமா நாயகன் தனுஷ்.

கோலிவுட்டில் ஆரம்பித்த இவர் பயணம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்றத்துக்கு காரணம் இவரது ஆழ்ந்த ஈடுபாடும் விடாமுயற்சியும் தான். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான படத்தின் 'வை திஸ் கொலவெறி' பாடல் மூலம் அவர் எதிர்பார்க்காத அளவு உலகம் முழுக்க பிரபலமானார். இவரது 15 வருட தமிழ் சினிமாவில் 25 படத்திற்கும் மேல் ஹீரோவாக நடித்துள்ளார் தனுஷ். இவர் நடித்த படங்களில் டாப் 10 படங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக !!!


யாரடி நீ மோஹினி

தனுஷ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் யாரடி நீ மோகினி. இது ஒரு தெலுங்கு ரீமேக் படமாக இருந்தாலும் தனுஷின் சிறந்த நடிப்பால் இந்த படம் ஹிட் ஆனது. இந்த ரொமான்டிக் ட்ராமா படத்தை விரும்பாத ரசிகர்களே இல்லை.


மாரி

தனுஷ் காஜல் அகர்வால் ரோபோ ஷங்கர் போன்றோர் நடித்துள்ள படம் மாரி. தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படத்துக்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் சினிமா துறையில் இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக கருதப்படுகிறது.


 3
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த ரொமான்டிக் ட்ராமா படம் 3. இந்த படத்தின் பாடல் "வை திஸ் கொலவெறி"  நாடு முழுக்க ட்ரெண்ட் ஆன நிலையில் படமும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் தனுஷின் நடிப்பு தனித்துவமாக இருந்ததே ஹிட் ஆனதற்கு காரணம் என்றும் சொல்லலாம்.

வேலை இல்லா பட்டதாரி

2014ம் ஆண்டு தனுஷ் அமலாபால் நடித்த படம் வேலை இல்லா பட்டதாரி. பொறியியல் படித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் ஒரு நல்ல எடுத்துகாட்டாக இருந்தது.

மரியான்

2013 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் பார்வதி மேனன் நடித்த படம் மரியான். ஒரு சிறந்த நடிகராக நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கொடுத்த படம் இது. ஒரு மீனவனின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை தழுவியே கதைக்களமாக அமைந்தது.


மயக்கம் என்ன
போட்டோகிராஃபி மீது கொண்ட காதல் காரணமாக விடாமுயற்சி செய்து கடைசியில் போட்டோக்ராஃபராக சாதிப்பதே மயக்கம் என்ன திரைப்படம். காதல், லட்சியம், உணர்ச்சிகள் இவை அனைத்தையும் அழகாய் காத்திருப்பார் தனுஷ். தனுஷின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் மிக முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பொல்லாதவன்

ஆசை ஆசையாக வாங்கிய பைக்கை தொலைத்துவிட்ட இளைஞன் படும் கஷ்டங்களை விவரிக்கும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருப்பார் தனுஷ். 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படம் தனுஷிற்கு ஹிட் கொடுத்த படம்.


காதல் கொண்டேன்

எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் படம் காதல் கொண்டேன். தமிழ் சினிமாவிற்கு வந்த புதுதில் தனுஷிற்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு தான் இத்திரைப்படம். அவர் சினிமா பயணத்தின் முதல் படியாக எப்போதுமே இந்த திரைப்படம் கூறப்படும்.

ஆடுகளம்
தனுஷ் மற்றும் டாப்சீ நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். மதுரையின் சேவல் சண்டையை கதையின் கருவாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஆறு தேசிய விருதுகள் பெற்றது குறபிடத்தக்கது. இந்த திரைப்படத்திலும் ஒரு வித்தியாசனமான தனுஷை பார்க்கலாம்.


புதுப்பேட்டை

2006ம் ஆண்டு செல்வ ராகவன் இயக்கத்தில் தனுஷின் புதுவிதமான நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை. இத்திரைப்படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் மிக தத்ரூபமாய் அழகாய் தன் நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்றிருப்பார் தனுஷ்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close