கடந்த ஒரு வாரமாவே பேஸ்பூக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் எல்லாம் #கிகி சேலஞ் என்ற ஹாஷ்டாக் வைரலாகி கொண்டிருக்கிறது. முதலில் வெளி நாடுகளில் ஆரம்பித்த இந்த சேலஞ் இப்போது இந்தியாவிலும் டிரன்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது.
#கிகி சேலஞ் என்றால் என்ன ? இதை "இன் மை பீலிங்ஸ் சேலஞ்" என்றும் கூறுகின்றனர். பாப் பாடகர் டிரேக் பாடிய 'ஸ்கார்பியன் 'ஆல்பத்திலிருந்து இன் மை பீலிங்ஸ் என்ற பாடலுக்கு ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாட வேண்டும். ஓடும் காரின் வேகத்திலேயே அந்த கார் செல்லும் அதே திசையில் நகர்ந்துகொண்டே நடனம் ஆட வேண்டும்.
இந்த சவாலை பெண்களே அதிகம் செய்கின்றன. வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலையில் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடுவது ஆபத்தான விஷயம் தான். ஆனாலும் சிலர் இதை பொழுது போக்கிற்காக செய்யும் போது கீழே விழுந்து அடிப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் போலீசார் சாலையில் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடுவோரை கண்டால் கண்டிப்பாக எச்சரித்து அனுப்புகின்றனர்.
இன்னும் சிலர் இது போல விடியோக்களை பதிவிட்டு டிரன்ட் ஆக முயற்சி செய்கின்றனர்.
#inmyfeelingschallenge had to be done!!!@champagnepapi you’ve got us South Indian girls dancin to your tunes.. 😂😋
— ReginaCassandra (@ReginaCassandra) July 29, 2018
This is the craziness that goes on between shots... 🙄😛
Video and styling: @jaya_stylist
Music supervision:#priyankatumpala pic.twitter.com/dTA1enB9Nt
தென்னிந்திய நடிகை ரெஜினா கேசன்ட்ரா சமீபத்தில் இந்த சேலஞ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பாவாடை தாவணியில் இவர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த சாவலை எதிர்கொள்ளும் பலரும் கீழே விழுந்து சேலஞ்சில் தோற்று போகின்றனர்.
Alright shut it down everybody. The #KikiChallenge is over with. pic.twitter.com/4rUdb72tnf
மனிதர்கள் விடியோக்களை பார்த்து சலித்த நமக்கு இந்த நாய் கிகி சேலஞ் நடனம் ஆடுவது வியக்க வைக்கிறது.
சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இந்த #கிகி சேலஞ் ஹேஷ்டாகை பயன்படுத்தி வருகின்றன. நடனம் ஆடும்போது கீழே விழுந்து விட்டால் அதை #கிகி சேலஞ் ஃபெய்ல்ஸ் என்ற இன்னொரு ஹாஷ்டகை டிரன்ட் செய்துவிட்டனர்.