இப்படி போகும் என சத்தியமா எதிர்பார்க்கவில்லை; 'மாணவன்' ஆனந்த்தின் Exclusive Interview

  கனிமொழி   | Last Modified : 27 Aug, 2018 04:47 pm
interview-with-actor-ananth

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'மாணவன்' ஆல்பம் வெளியிடப்பட்டது. மீசைய முறுக்கு படத்தில் ஆதிக்கு தம்பியாக நடித்துள்ள ஆனந்த இந்த பாடலை இயக்கியுள்ளார். நாளைய சமுதாயத்தினை குறித்து உருவாகியுள்ள இந்த 'மாணவன்' ஆல்பம் இளைஞர்கள் மத்தியில்  ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஒவ்வொரு மாணவனின் சக்தியை உணர்த்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

சமுக வலைதளங்களில் எதிர்பார்க்காத வரவேற்பையும் இந்த ஆல்பம் பெற்று வருகிறது. மேலும், ஆர்.ஜே விக்னேஷ், விஜய், நக்ஷத்ரா போன்ற பல யூடியூப் பிரபலங்கள் இந்த பாடலில் இணைந்து நடித்துள்ளனர். யூடியூப்பில் 'மாணவன்' 3.5 மில்லியன் பார்வைகளை பெற்று  டிரெண்டிங் வீடியோவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை இயக்கி நடித்துள்ள ஆனந்திடம் சில கேள்விகள்....

நடிகராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கீங்க. இந்த அனுபவம் எப்படி இருந்தது?

'ஹிப் ஹாப் தமிழா' என்பதே ஒரு குடும்பம் மாதிரி தான். ஆதி அண்ணா என்ன நம்பி கொடுத்த பெரிய பொறுப்பு இந்த இண்டிபெண்டன்ட் ஆல்பம். இதில் நடித்த யூடியூப் கலைஞர்களும் என்னோட நண்பர்கள் என்பதால் அவங்களை இயக்க சுலபமா இருந்தது. நானே இயக்கி அதில் நடிக்கும் போது அந்த அனுபவம் புதுசா இருந்தது. பல புது விஷயங்களை கற்றுகொடுத்தது.

மாணவன் ஆல்பம் இவ்வளவு பெரிய வரவேற்ப்பை பெறும் என்று எதிர்பார்த்தீங்களா ?

ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் 3.5 மில்லியன் பார்வைகள் வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை. இன்று சமுக வலைத்தளங்களில் பல பேர் ம்யுஸிகலி, டப்ஸ்மாஷ் செய்து டிரெண்ட் ஆகிறார்கள். அந்த டப்ஸ்மாஷ் வீடியோக்கு ஏன் இத்தனை ரசிகர்கள் என்று புரியவில்லை. இன்ஸ்டாகிராம் எடுத்தாலே அதில் ஒரு 10 பேர் டப்ஸ்மாஷ் ஹீரோனு சுத்திட்டு இருக்காங்க. இந்த மாதிரி இருக்கும் இளைஞர்கள் இடையே நம்ம இண்டிபெண்டன்ட் ஆல்பம் வைரல் ஆகுமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால் தற்போது எங்கள் ஆல்பம் டிரெண்ட் ஆகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

நீங்க ஹிப் ஹாப் தமிழாவின் ரீல் தம்பியா ரியல் தம்பியா என்ற கேள்வி பலருக்கும் உண்டு, உங்களுக்குள் இந்த நட்பு எப்படி ஆரம்பித்தது?

சினிமாவுக்குள் வருவதற்கு முன்னாடியே எனக்கு ஆதி அண்ணா ரோல்மாடல்னு சொல்லாம். 'சொந்தக்காரனால் நிக்கிறதை விட சொந்த காலில் நிக்கிறவன் தான் கெத்து'ன்னு அவர் சொன்ன விஷயம் என்னை அதிகமாக ஈர்த்தது. பின்னர் மீசைய முறுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எல்லாரையும் அதிகமா ஆதரித்து நம்பிக்கை கொடுப்பார் ஆதி அண்ணா. அவர் கிட்ட எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் இது தான். எனக்கு இந்த மாணவன் ஆல்பம் இயக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு ஆதி அண்ணாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எங்கள் குழுவின் ஒன்பது மாத உழைப்பே இந்த மாணவன்.

இந்த பாடல் மூலம் மக்களிடம் நீங்கள் கூற நினைக்கும் கருத்து என்ன?

எப்போதுமே ஆதி அண்ணா சொல்வாரு 'கருத்துக்களை கலை வழியாக கூறும் கலைஞர்களாய் நாம் இருக்க வேண்டும்' என்று. அது போல எங்களோட கருத்தை தான் இந்த பாடலில் சொல்லி இருக்கிறோம். மனிதத்தை உயர்த்துவோம் மதத்தை அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். வாழ்க்கைகாக படிக்கணும் வெறும் மார்க்கிற்காக படிக்க கூடாது, வாழ்கைக்காக படிக்கும் அனைவரும் மாணவர்களே. அந்த மாணவர்கள நினைத்தால் இந்த தேசத்தை ஆக்கபூர்வமான திசையில் கொண்டு செல்ல முடியும். கல்வியை சரியாக பயன்படுத்தி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த பாடலின் கருத்து.

மாணவர்களுக்காக ஹிப் ஹாப் தமிழா தயாரிப்பில் எடுக்கப்பட்ட இந்த மாணவன் இன்று தமிழகம் முழுக்க பல்வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் திரையிடப் பட்டு வருகிறது. "இன்றைய மாணவன் நாளைய மன்னவன்" என்ற இந்த பாடல் வரிகள் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close