அட்லீயிடம் இருந்து வந்த கால் - கோகோ அன்புதாசனின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

  கனிமொழி   | Last Modified : 06 Sep, 2018 05:57 am

didn-t-expect-a-call-from-atlee-koko-anbu-dasan-exclusive-interview

இந்த ஜெனெரேஷன் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் யூடியூப் இருந்தாலே போதும் மற்ற வேலைகள் எல்லாமே மறந்துவிட்டு இணையத்தில் மூழ்கி விடுவார்கள். சினிமாவுக்கு வரவேண்டும் என்று ஆசை படும் கலைஞன் கூட இப்போ ம்யூசிக்கலி, டப்ஸ்மாஷ் செய்து குறுகிய காலத்திலேயே மக்களிடம் ரீச் ஆகின்றனர்.

இந்நிலையில் எங்கு பார்த்தாலும் ஒரு புதிய யூடியூப் சேனலை துவங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அதில் ஒரு சில யூடியூப் சேனல்கள் மட்டுமே பிரபலமாகின்றது. பிரபலமான யூடியூப் சேனல் ஸ்மைல் சேட்டை கலைஞர் அன்பு தாசன் தன் வாழ்க்கையை யூடியூபில் துவங்கி இன்று நயன்தாரா கூட சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் நம் யூடியூப் கலைஞர் அன்பு தாசன் ஆர்வ கோளாறு காதலனாக நடித்து அசத்தியுள்ளார். யோகி பாபுவுடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் எல்லாமே ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. யூடியூபிலிருந்து சினிமாவிற்கு வந்த அனுபவம் பற்றி அன்பு தாசனிடம் சில கேள்விகள்....

கோலமாவு கோகிலா பட வாய்ப்பு கிடைத்தது எப்படி ? சினிமா அனுபவம் எப்படி இருந்தது?

என்னுடைய யூடியூப் விடியோஸ் எல்லாமே பார்த்துட்டு கோகோ படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டர் என்னை கூப்பிட்டாரு. அப்போ எனக்கு இது இவ்வளவு பெரிய ப்ரொடக்ஷன்னு தெரியாது. டைரக்டர் என்னோட கதாபாத்திரத்தை பற்றி பேசினார். அதுக்கு பிறகு எனக்கும் இந்த படத்தில கண்டிப்பா நடிக்கணும்னு ஆசை வந்துருச்சு. இந்த படம் அனுபவம் ரொம்பவே புதுசாவும் ஸ்வாரஸ்யமாவும் இருந்துச்சு. ஒரு கலைஞன் கிட்ட எப்படி நடிப்பை கரெக்ட்டா வாங்கணும்னு தெரிஞ்ச டைரக்டர் நெல்சன் அண்ணா. மொத்தத்தில இந்த படக்குழு கூட சேர்ந்து வேலை செய்தது ரொம்ப சந்தோஷமான அனுபவம்.

டிஜிட்டல் மீடியா ஸ்டார் சினிமாவில் நடிப்பது சுலபமா ? அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க ?

ஒவ்வொருத்தர் திறமைக்கு ஏற்றது அது. நாலு வருஷம் டிஜிட்டல் மீடியாவில் இருந்துட்டு சினிமாவில் நடிப்பதால் எனக்கு அது பெரிய விஷயமா தெரியல. போன வருடம் மீசையை முறுக்கு படத்தில நடித்ததற்கு பிறகு இது தான் சினிமா என்று கொஞ்சம் கத்துக்கிட்டேன். அதுனால என்னமோ எனக்கு சுலபமா தான் இருந்துச்சு.

நீங்கள் நடிக்க வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் ?

சின்ன வயசுல இருந்து எனக்கு ஃபைட்டர் பைலட் ஆகணும்னு ஆசை. மீடியால வரணும்னு ஆசை இருந்தப்போ இயக்குனரா வரணும் நினைத்தேன். அதேமாதிரி எங்க யூடியூப் சேனல் வீடியோக்கள் நானே இயக்கி நடிப்பதும்  உண்டு. நடிக்க வராம இருந்திருந்தா இயக்குனர் ஆக முயற்சி செய்திருப்பேன்.

வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் ?

வாழ்க்கைல நிறைய கஷ்டங்கள கடந்து தான் பல பேர் இன்னிக்கு சினிமாவிற்கு வரான். சொந்த ஊற விட்டுட்டு சென்னை வந்து தனியா வாழ்றதே பெரிய சவால். சம்பளம், வாய்ப்புகள், புடிச்ச வேலை இதெல்லாமே கிடைக்க கண்டிப்பா போராடனும். இத கஷ்டங்கள்னு சொல்றத விட வாழ்க்கை கத்துக்கொடுக்கற பாடம் என்று சொல்லலாம்.

உங்க வாழ்க்கைல மறக்க முடியாத தருணம் ?

கோலமாவு கோகிலா படம் ரிலீஸ் ஆன பிறகு டைரக்டர் அட்லீ போன் பண்ணி வாழ்த்து தெரிவிச்சாரு. அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு . எதிர்பார்க்காத ஒரு தருணம் அது. அதே போல டைரக்டர் விக்னேஷ் சிவன், அனிருத் சூப்பரா நடிச்சீங்கனு சொல்லி பாராட்டினாங்க.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.